Published January 01, 2025 by with 0 comment

டிஎன்பிஎஸ்சி: 15,000 காலியிடங்கள் அறிவிப்பு – அடுத்த வாரம் தேர்வு அட்டவணை வெளியீடு!!!!!!

               தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விரைவில் 15,000 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடவுள்ளது. இதன் மூலம் குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியதன்படி, அடுத்த வாரத்தில் தேர்வுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்படும். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களது பாடத்திட்டங்களைத் திட்டமிட்டுக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

குரூப் 1 தேர்வுகள் மூலமாக உயர் பதவிகளான கலெக்டர், டிஎஸ்பி மற்றும் ஆட்சிப் பணிகளில் சேர வாய்ப்பு உள்ளது. குரூப் 2 தேர்வுகள் மற்றும் குரூப் 4 தேர்வுகள் மூலமாக நியாயமான சம்பளத்துடன் அரசு வேலை கிடைக்கும். இந்த தேர்வுகள் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, காவல் துறை போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை வழங்கும்.

விண்ணப்பிக்கும் அனைவரும் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ஐ தொடர்ந்து பார்த்து தேர்வு அட்டவணையை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு அதிக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசுப் பணிக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், கல்வி முடித்தவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் மற்றும் வயது வரம்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

0 comments:

Post a Comment