தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உறவு இருப்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி ஆகியோர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. இந்த புகைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிகிறது.
கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம், இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது !!
0 comments:
Post a Comment