பிரபல கன்னட நடிகரும் 'சிவா அண்ணா ” என ரசிகர்களால் கொண்டாடப்படும் சிவராஜ்குமார் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து வெளியான தகவல்களின் படி, புற்றுநோயின் ஆரம்ப நிலை அடையாளம் காணப்பட்டதால், சிகிச்சை முடிவுற்றதும் அவர் முழுமையாக மீட்கப்பட்டுள்ளார்.
64 வயதான சிவராஜ்குமார், கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டார். இதனால், புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிறந்த மருத்துவ குழுவின் கண்காணிப்பில் நடந்த அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது.
சிகிச்சைக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "இது எங்களுக்கு ஒரு சோதனை நேரமாக இருந்தாலும், ரசிகர்கள் மற்றும் நன்பர்களின் ஆதரவு மிகுந்த சாந்தியையும் தைரியத்தையும் அளித்தது. சிவராஜ்குமார் விரைவில் தன்னுடைய புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்குவார்," என்று கூறப்பட்டுள்ளது.
அவரது உடல் நலம் குறித்த செய்தி ரசிகர்களிடையே பெரிய அளவில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மகிழ்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சிவராஜ்குமார், தனது மகளின் திருமணத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த சிகிச்சை நிகழ்ந்துள்ளது. அதையும் மும்முரமாக முன்னெடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. "வாழ்க்கையின் சவால்களை சாதனைகளாக மாற்றுவது தான் உண்மையான வெற்றி," என அவர் கூறியுள்ளார்.
தற்போது அவர் முழுமையான சுகமடைந்துள்ளதால், அவரது அடுத்த படங்களின் அறிவிப்புகள் மீண்டும் கன்னட திரையுலகில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
0 comments:
Post a Comment