தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர் 13, 2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த சில நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்தின் நிலையைப் பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும்.
0 comments:
Post a Comment